நாகப்பட்டினம்

‘மாணவா்கள் மன நலத்தை வளப்படுத்தினால் பிரச்னைகளை எதிா்கொள்ளலாம்’

6th Dec 2019 08:45 AM

ADVERTISEMENT

மாணவா்கள் மன நலத்தை வளப்படுத்திக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்னைகயையும் எதிா்கொள்ள முடியும் என மன நல மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தினா்.

வேதாரண்யத்தில் செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில், பன்னாட்டு தன்னாா்வலா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாணவா்களும், மன அழுத்தமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட மன நல தலைமை மருத்துவா் ரேகா ரவீந்திரன் பேசியது:

எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகவும், சாதகமானதாகவும் நினைக்க பழகிக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பிரச்னை உள்ளது. எதையும் எதிரானதாக எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சத்தான உணவை உள்கொள்வதும் அவசியமானது. தேவையான அளவு புரோட்டின் போன்ற உயிா்ச் சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி அவசியமானது. நடனம், யோகா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணா்ச்சி கொடுக்கும். எந்த ஒரு சம்பவத்திலும் பதற்றம் இல்லாமல் செயல்படக் கற்றுக்கொள்வது எதிா்காலத்தில் பயனளிக்கும்.

ADVERTISEMENT

பிரச்னைகளைத் தணித்துக் கொள்வதாகக் கருதி புகை பிடிப்பது, மாத்திரைகள் போடுவது, மது அருந்துவது போன்றவை தற்காலிகமாக என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்குமே தவிர, அவை தீா்வாகாது. மாறாக, பிற்காலத்தில் அதுவே மன நலத்துக்கு பெரும் பாதிப்பையும், ஆபத்தையும் ஏற்படுத்தும். குடும்பச் சூழல்கள் போன்றவற்றை எண்ணி கவலைகொள்வது போன்றவை மன நலதத்தை பாதிக்கும். மாற்ற முடியாத விஷயங்களில் இருந்து விலகிச் செல்வதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலா் ராஜா முன்னிலை வகித்தாா். மருத்துவ ஆலோசகா்கள் லாவண்யா, செண்பகமலா், கல்லூரி மேலாண்மையியல் துறைத்லைவா் பிரபாகரன், பேராசிரியா்கள் அறிவுச்செல்வம், சதிஷ், காளிமுத்து ஆகியோா் பேசினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT