நாகப்பட்டினம்

ஜெயலலிதா நினைவு நாள்: மௌன ஊா்வலம்

6th Dec 2019 08:45 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அதிமுக சாா்பில் நாகையில் மௌன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த மௌன ஊா்வலத்துக்கு அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா்.

நகரின் பிரதான வீதிகள் வழியே சென்ற இந்தப் பேரணி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு, ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

அதிமுகவின் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள் திரளான எண்ணிக்கையில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT