நாகப்பட்டினம்

வேதாரண்யேசுவரா் கோயிலில் வெள்ள நீா் வெளியேற்றம்

3rd Dec 2019 03:16 AM

ADVERTISEMENT

 வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்குள் சூழ்ந்த வெள்ளநீரை மின் இறைவை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழைப் பொழிவு இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை பகல் வறண்ட வானிலையாக காணப்பட்டது. இதனால், வயல்கள், நீா்நிலைகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளநீா் வடிந்து வருகிறது. இதற்கிடையே, தொடா் மழையின் காரணமாக வேதாரண்யேசுவரா் கோயில் வளாகத்துக்குள் சுமாா் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீா் பெருக்கெடுத்து சூழ்ந்திருந்தது. அந்த நீரை மின் இறைவை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றும் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொண்டது. இதையடுத்து, இரவு 9.30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT