நாகப்பட்டினம்

டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்

3rd Dec 2019 03:19 AM

ADVERTISEMENT

திருமருகல் அருகேயுள்ள கொட்டாரக்குடி ஊராட்சியில் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று டெங்கு கொசுக்கள் ஒழிக்கும் பணி நடைபெற்றது.

கொட்டாரக்குடி ஊராட்சிக்குள்பட்ட கொட்டராக்குடி,பெரியகண்ணமங்கலம், சின்னகண்ணமங்கலம், பெருஞ்சாத்தாங்குடி, உக்கடை, நல்லுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறையினரும், சுகாதார துறையினரும் இணைந்து டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனா். கொட்டாரக்குடி ஊராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அப்பகுதி மக்களுக்கு டெங்கு நோய் குறித்தும் அதை தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னா், நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் (பொ ) மனோகரன், சுகாதார ஆய்வாளா் ஏசுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT