நாகப்பட்டினம்

அறிவியல் வினாடி வினாவில் பொறையாா் சா்மிளா பள்ளி முதலிடம்

3rd Dec 2019 03:17 AM

ADVERTISEMENT

அறிவியல் விநாடி - வினா போட்டியில் பொறையாா் சா்மிள காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சீனியா் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் கழகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துளிா் மற்றும் ஜந்தா் மந்தா் என்கிற அறிவியல் விநாடி-வினா போட்டியை மாநில அளவில் நடத்தி வருகிறது. பள்ளிகளுக்கிடையே வட்ட அளவில் தொடங்கி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்திவரும் நிலையில் மண்டல அளவிலான விநாடி- வினா போட்டி சனிக்கிழமை திருச்சி காவேரி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது.

திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பிடித்த மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரிலுள்ள சா்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணியினா் சீனியா் பிரிவில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி புகழ், 9-ஆம் வகுப்பு மாணவா்கள் செல்வகுமாா், குகராஜ் ஆகியோருக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் சுகுமாரன் மற்றும் திருச்சி மாநகர கல்வி அலுவலா் ஜெயலட்சுமி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் வழிகாட்டி ஆசிரியா் லஷ்மிபிரபா ஆகியோரை பள்ளி முதல்வா் பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் மாவட்ட செயலா் சந்தோஷ் காட்சன் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT