நாகப்பட்டினம்

அரசுப் பள்ளிக்கு பரிசுத் தொகை

30th Aug 2019 09:55 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு அரசின் பரிசுத் தொகையாக ரூ. 12,500 புதன்கிழமை அளிக்கப்பட்டது.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, காமராஜரின் பிறந்த நாளைகல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் கல்வித் துறை சிறப்பு பரிசாக ரூ.12,500 வழங்கப்பட்டுள்ளது. இதை பள்ளித் தலைமையாசிரியர் சு. ராசேந்திரனிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. குணசேகரன் வழங்கினார். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர் சி. கார்த்திகேயன், வட்டாரக் கல்வி அலுவலர் சி. சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர். பரிசு பெற்றமைக்காக பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட  ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆர்.எஸ். சீனிவாசன்,
க. ரமேஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT