வேதாரண்யம் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீர்காழியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதன்கிழமை வழக்குரைஞர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து சீர்காழி லாயர் அசோசியேஷன்ஸ் சார்பில் வழக்குரைஞர் செல்வராஜ் தலைமையில், வழக்குரைஞர்கள் கருப்பு துணியால் கண்ணை மறைத்து கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூத்த வழக்குரைஞர்கள் சந்திரமோகன், வீரமணி, நெடுஞ்செழியன், கணேசமூர்த்தி, வினோத், ராஜலெட்சுமிஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.