நாகப்பட்டினம்

முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

29th Aug 2019 03:31 AM

ADVERTISEMENT

அகரகொந்தகை கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் வருவாய் அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்து,பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில் முதியோர் உதவித் தொகை, விதவையர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.  இம்முகாமில், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதேபோல், நரிமணம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வருவாய் அலுவலர் ஆ. சந்திரசேகரன் தலைமை  சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருவிடமருதூரில்...
 திருக்குவளை, ஆக. 28: திருக்குவளை அருகேயுள்ள திருவிடமருதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
 இம்முகாமில் தாட்கோ மூலம் கறவை மாடு வாங்க  கடனுதவி கேட்டு 13 மனுக்களும், பட்டா மாற்றுதல் தொடர்பாக 10 மனுக்களும், பதிவு செய்யாத இறப்புச் சான்றிதழ் வேண்டி 6 மனுக்களும், சாலை வசதி வேண்டி  3 மனுக்களும், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனுவும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 35 மனுக்கள் பெறப்பட்டன. 
இதில், வட்ட வழங்கல் அலுவலர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், ஊராட்சி வேளாண்மை அலுவலர் ரவிசந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்வாணன்,
கிராம உதவியாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT