நாகப்பட்டினம்

செப்.1-இல் மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு

29th Aug 2019 03:34 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் செப்டம்பர் 1-ஆம் தேதி நாகை மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் எல். சுரேன், செயலர் வை. பாரதிதாசன் ஆகியோர் தெரிவித்தனர். 
இதுகுறித்து, அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கூடைப்பந்துக் கழகம் சார்பில் மாநில அளவிலான 18 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை நடத்த உள்ளது. இதில் பங்கு பெறவுள்ள நாகை மாவட்ட ஆண்கள், பெண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் 1.1.2001 அன்று அல்லது அதற்குப் பிறகு  பிறந்தவர்கள் பங்கேற்கலாம். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பிறப்புச் சான்றிதழ், ஈஎம்ஐஎஸ் எண், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், ஆதார் அட்டை, பெற்றோரின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944885519 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT