வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் கட்டுக் கட்டாக பீடி இலைகள் ஒதுங்குவது தொடரும் நிலையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பீடி இலைக் கட்டுகள் கரை ஒதுங்கியது புதன்கிழமை தெரிய வந்தது.
கோடியக்கரை கடற்கரையில் கடந்த சில வாரங்களா பீடி இலைக் கட்டுகள் அவ்வப்போது ஒதுங்கி வருகின்றன. இந்நிலையில், கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் பகுதி முதல் படகுத்துறை பகுதி வரையிலான கடற்கரையோரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பீடி இலைகள் கட்டுக்கட்டாக ஒதுங்கி இருந்தது தெரிய வந்தது.