குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என குத்தாலம் அருகே உள்ள மங்கைநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீரசோழன் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு அதன் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். இயக்குநர்கள் சுகுமார், சந்தானகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இயக்குநர் ஜெ. நடராஜன் வரவேற்றார்.
இதில் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பிரபாகரன், வேளாண் விற்பனை வணிகத் துறை துணை இயக்குநர் சுரேஷ்பாபு, வேளாண் உதவி பொறியாளர் செல்லப்பாண்டியன், வேளாண் உதவி இயக்குநர்கள் சங்கரநாராயணன், வெற்றிவேலன், தாமஸ் ஆகியோர் தமிழக அரசு செயல்படுத்திவரும் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினர்.
நூறு சதவீத மானியத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசிடமிருந்து அனுமதி வரப்பெற்றுள்ளது. முதல் தவணைத் தொகை கிடைக்கப் பெற்றதும் அசிக்காடு கிராமத்தில் உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் இப்பணி தொடங்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இயக்குநர் ஜானகிராமன் நன்றி கூறினார்.