சீர்காழியில் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பூத்து கமிட்டி அமைப்பது, செப்டம்பர் 9-ஆம் தேதி மீண்டும் சட்டப் பேரவைத் தொகுதி கூட்டம் நடத்துவது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் குமார், பட்டேல், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், நகர் மன்ற முன்னாள் தலைவர் கணிவண்ணன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.