கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை (குரூப்-2) நேரடி நியமனஅலுவலர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதவியாளர் முதுநிலைப் பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும். குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உரிய பயிற்சியை அளித்து, பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவர்ஆர். சையது அபுதாஹீர் தலைமை வகித்தார். நாகை மாவட்டத் தலைவர் சு. ரமேஷ், மாவட்டச் செயலாளர் சு. விஜயராணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.