சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இம்முகாமில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், அமிர்தலிங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சந்திரா, பகுதி சுகாதார செவிலியர் விஜயலதா, செவிலியர் விஜிலா மற்றும் ஊராட்சி செயலர் கலந்து
கொண்டனர்.