நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் சீரமைப்புப் பணி

27th Aug 2019 07:59 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழாண்டில் ஆகஸ்ட் 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிக்காக நாகை மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக பேராலயம் நிர்வாகம் சார்பில் நடைபாதை, கட்டடங்கள், விடுதிகள், குடிநீர் குழாய்கள், மின் விளக்குகள் சீர்படுத்துதல் மற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT