சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திங்கள்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சீர்காழி வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்கு டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலாஜி தலைமையில் டீ,பிஸ்கெட், தண்ணீர் புட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மோகனசுந்தரம், சுப்பு.சொர்ணபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.