மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை, திருமூலர் திருமன்றம் மற்றும் மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த உழவாரப் பணியில், மாயூரநாதர் சன்னிதியின் அனைத்துப் பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. இப்பணியில், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன், மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் திருமாவளவன், செயலாளர் பாலசரவணன், மயிலாடுதுறை ஜெயின் சங்கத் தலைவர் ராஜ்குமார் ஜெயின், மென்பொறியாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசம், சாய் சட்டக் குழும அலுவலக ஊழியர்கள், மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.