நாகப்பட்டினம்

வேதாரண்யம் - சென்னை அரசுப் பேருந்து கட்டண விவரம்

23rd Aug 2019 06:40 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் - சென்னை புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் படுக்கை வசதியுள்ள அரசு விரைவுப் பேருந்து கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வேதாரண்யத்தில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மைய முகவர் கூறியது: வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இரவு 9.15-மணிக்கு படுக்கை வசதியுள்ள அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுகிறது. 
இப்பேருந்தில், திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரையுள்ள நாள்களில் பயணக் கட்டணமாக ரூ. 540, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை பயணக் கட்டணமாக ரூ. 615 வசூலிக்கப்படுகிறது. இதேபோல், சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் பேருந்துக்கும் இதே கட்டண முறை நடைமுறைபடுத்தப்படுகிறது  என்றார் அவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT