நாகப்பட்டினம்

கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: வழக்குரைஞருக்கு பாராட்டு

23rd Aug 2019 06:33 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைய பணியாற்றிய வழக்குரைஞர் ராம. சேயோனுக்கு, பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில், வழக்குரைஞர்கள் மற்றும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. 
இந்த நீதிமன்றம் மயிலாடுதுறையில் அமைய பணியாற்றிய மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராம. சேயோனுக்கு, அவரது மூத்த வழக்குரைஞர் முருகு. மாணிக்கம் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டி. மதிவாணன் தலைமை வகித்து பேசியது: 
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில், அரசாணை திருத்தம் செய்யப்பட்டு, மயிலாடுதுறைக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைந்தது மிகப் பெரிய சாதனை என்றார் அவர். 
இதில், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் குத்தாலம் பி. கல்யாணம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஜெகவீரபாண்டியன், சத்தியசீலன், முஹம்மது சித்திக், குத்தாலம் க. அன்பழகன், மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.சிவபுண்ணியம், பாலு, அழகிரி, தொழிலதிபர்கள் செல்வம், சி. செந்தில்வேல், எம்.என்.ரவிச்சந்திரன், எஸ்.வி.பாண்டுரெங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT