நாகப்பட்டினம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி

23rd Aug 2019 06:39 AM

ADVERTISEMENT

குத்தாலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆக.20,21 ஆகிய இரண்டு நாள்கள் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிநடைபெற்றது. 
உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், குத்தாலம் வட்டத்தில் உள்ள 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிக்கான நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் க. அருள்மொழி தலைமை வகித்தார். 
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என். ரெத்தினம், மேலாண்மைக் குழு தலைவர் எம்.சி. பாலு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜெயபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக, போட்டியை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றகவுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT