ஆடிக் கடைசி வெள்ளியை முன்னிட்டு, திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் மாழையொண் கண்ணி சமேத இருதய கமலநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வலிவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.