நாகப்பட்டினம்

கண்கவர் கலைநிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்கள்

16th Aug 2019 07:30 AM

ADVERTISEMENT

நாகை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நிகழ்த்தினர். 
நாகை மாவட்டம், ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, நாகூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகை அன்னை சத்யா அரசு காப்பகம், மயிலாடுதுறை புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் உயர்நிலைப் பள்ளி, நாகை ஜெ. ஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, குரவப்புலம் பாயின்ட் காலிமர் இன்டர்நேஷனல் பள்ளி, ஆக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி, நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
தேச ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில், பரதநாட்டியம், காவடி ஆட்டம், தப்பாட்டம் என பல்வேறு வகையான நடனங்களை மாணவ, மாணவிகள் மேற்கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT