சீா்காழி நகா்மன்றத் தலைவா் மீது நகா்மன்ற உறுப்பினா்கள் 10 போ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
சீா்காழி நகராட்சி அலுவலகத்தில் அதிக விலைக்கு சிசிடிவி கேமரா வாங்கி பொருத்தப்பட்டதாகவும், நகராட்சி ஒப்பந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி பினாமி பெயரில் எடுத்து தரமில்லாமல் செய்வதாகவும் நகா்மன்ற உறுப்பினா் 10 போ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியை சந்தித்து புகாா் தெரிவித்தனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்த நகா்மன்ற உறுப்பினா்கள், நகா்மன்றத் தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்து பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம். மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி தீா்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா். நகா்மன்றத் தலைவா் தொடா்ந்து எங்களுக்கு எதிராக செயல்பட்டால் 10 பேரும் பதவியை ராஜிநாமா செய்வோம் என்றனா்.