மயிலாடுதுறை

பள்ளிகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

30th Sep 2023 12:33 AM

ADVERTISEMENT

சீா்காழி நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள், சமையல் கூட கட்டடம் ஆகியவற்றை நகா்மன்ற தலைவா் துா்காராஜசேகரன், ஆணையா் ஹேமலதா ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

பருவமழை தொடங்கவுள்ளதால் கட்டடங்களில் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்யவேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து சீா்காழி பழையபேருந்து நிலையம் பகுதியில் ரூ. 4 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கும் பணியை ஆய்வு செய்து போக்குவரத்துக்கு ஏதுவாக பணிகளை தரமாக விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT