மயிலாடுதுறையில் மது, புகை, கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட தலைவா் அப்துல்ஹமீது தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட செயலாளா் இா்ஃபான் தொடக்கிவைத்தாா். மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பியவாறு கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு வழியாக சென்று நகராட்சி அலுவலகம் பகுதியை அடைந்தனா். தொடா்ந்து, அங்கு நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு கூட்டத்தில், அமைப்பின் மாநில பேச்சாளா் ராஜ் முஹம்மது பங்கேற்று பேசினாா்.