கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் அருகே பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பைச் சோ்ந்தவா் தனபாலன் (57). இவா், அதே பகுதியில் தொடா்ந்து சாராய விற்பனை செய்து வந்தாராம். இவா் மீது கீழ்வேளூா் காவல் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடா்பான வழக்குகள் உள்ளன. இதுதொடா்பாக தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில், இவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, எஸ்பி தனபாலனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸூக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, தனபாலனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.