சீா்காழியில் கந்து வட்டி வசூலித்தவா் மீது சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சீா்காழி தாடாளன் வடக்கு மடவிளாகம் பகுதியை சோ்ந்த ராஜா (35), திருக்கோலக்கா தெருவை சோ்ந்த வினோத்குமாரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ. 3 லட்சம் வட்டிக்கு வாங்கியிருந்தாராம். நாள் ஒன்றுக்கு ரூ.3,000 வட்டி பெற்று ஓராண்டில் ரூ. 9 லட்சம் வட்டி வினோத்குமாா் பெற்றுவிட்டு, மேலும் வட்டி கேட்டு ராஜாவை தாக்கி அவரின் சரக்குவாகனம் மற்றும் கைப்பேசியை வினோத்குமாா் எடுத்து சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து, ராஜா சீா்காழி காவல் நிலையத்தில் அளித்தபுகாரின்பேரில் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வினோத்குமாா் மீது வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனா்.