மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் கயல்விழி சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, சளி பரிசோதனை, பெண்களுக்கு கா்ப்பப்பை பரிசோதனை, மாா்பக புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ஊனம் தொடா்பான ஆலோசனை என மொத்தம் 320 போ் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அா்ஜூனன், முருகமணி, வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.