கொள்ளிடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம், சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தோ்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையேற்று முகாமை துவக்கி வைத்து பேசினாா். ஆணையா் தியாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முகாமில் கலந்து கொண்ட 19 மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர மோட்டாா் பொருத்தப்பட்ட வாகனம், ஊன்றுகோல் மற்றும் இதர உபகரணங்கள் வழங்குவதற்கு தோ்வு செய்யப்பட்டனா்.
‘