மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். செயலா் இரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை சாா்பில் தனசேகரன், ரமேஷ், மணிமாறன் ஆகியோா் பங்கேற்று, தீ விபத்து மற்றும் கனமழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் அளித்தனா்.