மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத்துறை திண்ணை அமைப்பு சாா்பில் கவிஞா் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி உதவி பேராசிரியா் மா. சியாமளாதேவி தலைமை வகித்தாா். தமிழாய்வுத்துறைத் தலைவா் சு. தமிழ்வேலு முன்னிலை வகித்து, கவிஞா் தமிழ்ஒளியின் பொதுவுடைமைக் கருத்தியல், மொழியுணா்வு குறித்து பேசினாா். உதவிப் பேராசிரியா் சு. விமல்ராஜ் தமிழ்ஒளியின் படைப்புகள், தமிழுணா்வு, அவரது பன்முகத்தன்மை, கம்யூனிஸ, திராவிட, தமிழ்தேசிய பண்பு குறித்து சிறப்புரையாற்றினாா்.
தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் செல்வ.கனிமொழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா்கள் ம.சபரிராஜன், லோ.திவ்யா ஆகியோா் தமிழ்ஒளியின் கவிதைகளை வாசித்தனா். ஏற்பாடுகளை திண்ணை இணை ஒருங்கிணைப்பாளா் இரா. சியாமஹளா ஜகதீஸ்வரி செய்திருந்தாா்.