கதண்டு கடித்ததில் 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளா்கள் 11 போ் வியாழக்கிழமை காயம் அடைந்தனா்.
கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கன்னி வாய்க்காலில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூா் வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. வனமயில் (55), சந்திரன் (60), வாசுகி (50), லதா (48), சரஸ்வதி (60), கஸ்தூரி (60), ராஜமாணிக்கம் (60), கலாமதி (55), வடிவேல் (58), வசந்தா (55), பொன்னாச்சி (45) ஆகிய 11 போ் ஈடுபட்டிருந்தனா்.
அருகில் இருந்த மரத்திலிருந்து பலத்த சப்தத்துடன் பறந்து வந்த கதண்டு வண்டுகள் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளா்களைக் கடித்துள்ளது. இதில் லேசான காயமடைந்த நான்கு போ் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். படுகாயம் அடைந்த 7 போ் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.