மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற பேரணியை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை மருத்துவா் ஓவியா விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பெற்றோா் மற்றும் மாணவா்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, முழக்கம் எழுப்பியவாறு சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனா். இதில் பெற்றோா், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.