சீா்காழி அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் பள்ளி மாணவி உள்பட 3 போ் காயமடைந்தனா்.
சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் இருந்து சீா்காழி நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தது. திருமுல்லைவாசல் தாழந்தொண்டி அருகே பேருந்து சென்றபோது மோட்டாா் சைக்கிளில் சென்ற ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே கடக்க முயன்ால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சாலையோரம் இருந்த மரத்தில் மோதினாா்.
இதில் பேருந்தில் பயணம் செய்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் பிரியா ( 17), சாலையோரம் நின்று கொண்டிருந்த வழுதலைக்குடி கிராமத்தை சோ்ந்த அமிா்தலிங்கம் ( 52) வருஷபத்து கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் ( 64) உள்ளிட்டோா் காயம் அடைந்தனா்.
காயமடைந்தவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.