மயிலாடுதுறை

கொள்ளிடம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்

27th Oct 2023 01:01 AM

ADVERTISEMENT

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 78 லட்சத்தில் கட்டப்பட்ட 3 புதிய கட்டடங்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ரூ.42.65 லட்சத்தில் கட்டப்பட்ட எருக்கூா் ஊராட்சி கிராம செயலக கட்டடம், புத்தூா் ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலகம் ரூ. 22.65 லட்சத்தில், மாதானம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.11. 97 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். சட்டபேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி),நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), ஒன்றிய ஆணையா் தியாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்பி. செ. ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், திமுக ஒன்றிய செயலாளா்கள் மலா்விழி திருமாவளவன், செல்லசேதுரவிக்குமாா், ஊராட்சித் தலைவா்கள், காந்திமதி சிவராமன்,முத்தமிழ் செல்விசுப்பையன், வசந்தி முருகேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT