மயிலாடுதுறை

குட்கா, மது விற்ற 49 போ் கைது

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக 44 பேரும், குட்கா விற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செப்டம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் நடத்திய தீவிர மதுவிலக்கு சோதனையில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,885 லிட்டா் புதுச்சேரி சாராயம் மற்றும் 15 மதுப்பாட்டில்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய, 33 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 44 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 5 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 9 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத குட்கா விற்பனை குறித்து பொதுமக்கள் 96261-69492 என்ற எண்ணுக்கு அழைப்பு மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT