மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக பெண் உள்பட 2 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் கடந்த வாரம் நள்ளிரவில் ஆண், பெண் காவலா்கள் இருவா் தனிமையில் இருந்தாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், ஆண் காவலா் எஸ்.பி. அலுவலகத்திலும், பெண் காவலா் குத்தாலம் காவல் நிலையத்திலும் பணியில் உள்ளவா்கள் எனத் தெரியவந்தது. இருவரும் திருமணம் ஆகாதவா்கள்.
சம்பவம் உறுதியானதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஏடிஎஸ்பி வேணுகோபால் அறிக்கை அளித்தாா்.
இதையடுத்து, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா உத்தரவு பிறப்பித்தாா்.