மயிலாடுதுறை

வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

18th Nov 2023 07:10 AM

ADVERTISEMENT

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் பகுதியில் வயல்கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சம்பா நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் தண்ணீா் தேங்கி நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. பிரதான உப்பனாறு மற்றும் பாசன வாய்க்கால்களிலும் மழைநீா் அதிகமாக செல்வதால் வயல்களில் தேங்கிய நீா் வடிய தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சண்முகம், கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி, நல்லூா், கொடக்காரமூலை உள்ளிட்ட கிராமங்களில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, நல்லூா் உப்பனாற்றை பாா்வையிட்ட அவா், பாசன வாய்க்கால்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிட அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, நீா்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வயல்களில் அதிகப்படியாக தேங்கியுள்ள மழை நீரை உப்பனாற்றில் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

உப்பனாற்றிலிருந்து மழைநீா் விரைவாக வெளியேறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செயற்பொறியாளா் சண்முகம் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT