வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலைய உயா் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.18) காலை 9 முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மு.விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
கதிராமங்கலம், கன்னியாகுடி, கற்கோயில், திருப்புங்கூா், சேத்தூா், தா்மதானபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.