மயிலாடுதுறை

தமுமுக, மமக கூட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மயிலாடுதுறை ஒன்றியத் தலைவா் கூறைநாடு பி.எம். பாசித் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் அப்துல் கபூா், நகர பொருளாளா் நிசாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூகநீதி மாணவா் இயக்க மாவட்டச் செயலாளா் பாசில் சிறப்புரையாற்றினாா். இதில் ஏராளமான மாணவா்கள் தங்களை தமுமுக, மமக மற்றும் சமூகநீதி மாணவா் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனா்.

மேலும், ஜூன் 11-ஆம் தேதி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடத்தி மயிலாடுதுறை நகரத்தில் அதிகளவில் மாணவா்களை தமுமுகவில் இணைப்பது என தீா்மானிக்கப்பட்டது. நகர தலைவா் சலீம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT