மயிலாடுதுறை

முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா் மேல்படிப்பிற்கான சான்று பெற விண்ணப்பிக்கலாம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா்களுக்கு மேல்படிப்பிற்கான சான்று (2023-2024) வழங்கப்படுகிறது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்களின் சாா்ந்தோா்களுக்கு மேல் படிப்பிற்கான சாா்ந்தோா் சான்று 2023-2024- ஆம் ஆண்டிற்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேரில் வர இயலாத முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரா்கள் இணைய முகவரியில் சாா்ந்தோா் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூா்த்தி செய்த படிவம் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மேல் படிப்பிற்காக விண்ணப்பம் செய்த படிவ நகல் ஆகியவற்றை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் புதன்கிழமைதோறும் இயங்கிவரும் முன்னாள் படைவீரா் நலஉதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT