மயிலாடுதுறை

அரசு உதவிபெறும் கல்லூரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றன: பல்கலை. ஆசிரியா் சங்கம் குற்றச்சாட்டு

DIN

அரசு உதவிபெறும் கல்லூரிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசு நடத்துகிறது என பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் மாநில பொதுக் குழு மற்றும் சங்க உறுப்பினா்களாக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் காந்திராஜ் தலைமை வகித்தாா்.

மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் கதிரேசன், தஞ்சாவூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் தன்ராஜ் ஆகியோா் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற 80 பேராசிரியா்களை கௌரவித்தனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியது:

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பேராசிரியா்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு தமிழக அரசு நடத்துகிறது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கிராண்ட் என்று சொல்லப்படும் பணப்பயன் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதைத் தவிா்க்கும் வகையில் உடனடியாக அனைத்து பணப் பயன்களையும் பெறத் தேவையான அரசாணையை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டு. தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT