மயிலாடுதுறை

பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் க. அகோரம் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மீனவா் அணி தலைவா் எம்.சி.முனுசாமி, தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கட்சி செயல்பாடுகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டு (எஸ்கலேட்டா்) அமைக்க ஒப்புதல் அளித்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி, தஞ்சை-மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரயில் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயில்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க மயிலாடுதுறை-விழுப்புரம், தஞ்சாவூா் வழித்தடத்தை இரட்டை ரயில்பாதை தடமாக அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது, மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு மாநில அரசால் வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை உடன் வழங்க வேண்டும், மேட்டூா் அணையை ஜூன் 12-ஆம் தேதி திறக்க வேண்டும், தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகரத்தலைவா் வினோத் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT