மயிலாடுதுறையில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி காா்த்திகேயன் (34). இவரது மனைவி கிருத்திகா (28). தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லாததால் காா்த்திகேயன் மனஉளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவன் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக கிருத்திகா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மனைவியிடம் கைப்பேசியில் பேசிய காா்த்திகேயன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளாா். இதுகுறித்து கிருத்திகா அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளாா். பின்னா் அதிகாலை 5 மணி அளவில் கிருத்திகா கணவன் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது காா்த்திகேயன் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.