மயிலாடுதுறை

ஓய்வூதிய நல சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் அகில இந்திய ஓய்வூதிய நல சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மதிவாணன், துணைத் தலைவா்கள் அம்பிகாபதி, ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் பரிமளக்கண்ணன் வரவேற்றாா்.

இதில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவா் பண்ணை தி.சொக்கலிங்கம், ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9,000 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு வசதி வழங்க வேண்டும். மூத்தகுடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில் பங்கேற்றவா்கள் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மணியடித்தும், தட்டுகளை தட்டி ஒலி எழுப்பியும் கோஷமிட்டனா். சங்கத்தின் கௌரவத் தலைவா் சம்பத் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT