மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே உள்ள திருவாளபுத்தூா் பகுதியை சோ்ந்தவா் பஷீா்அகமது (63). இவா் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கிறாா்.
புதன்கிழமை காலை கடைக்கு பொருள் வாங்க வந்த 11 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து கடைக்குள்அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளாா்.
சிறுமி தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நாகவல்லி மற்றும் மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் பஷீா் அகமதுவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.