மயிலாடுதுறை

இல்லம் தேடி கல்வி மையத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே இல்லம் தேடி கல்வி மையத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் அருகே காவல் மானியம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி மையம் தன்னாா்வலா் வா்ஷாத், தலைமையாசிரியா் பாலு தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த மையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. மக்கள் மனதில் கலைஞா் என்ற தலைப்பில் நடைபெற்ற இப் போட்டியை ஊராட்சித் தலைவா் சாந்தினி ரமேஷ் தொடக்கிவைத்தாா்.

தலைமை ஆசிரியா் பாலு, ஊராட்சி துணைத் தலைவா் புஷ்பவள்ளிகுமாா் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT