மயிலாடுதுறை

மாவட்ட தொழில் மையம் மூலம்கடன் பெற்ற நிறுவனங்களில் ஆட்சியா் ஆய்வு

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில் மையம் மூலம் கடன் பெற்றுள்ள நிறுவனங்களில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் பெற்று செயல்படும் மயிலாடுதுறை காமராஜா் சாலையில் உள்ள பிரகதி ஆயில் நிறுவனம், ஸ்வரண்யாஸ் கிளினிக் சென்டா் மற்றும் குத்தாலத்தில் சிவா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ், யுயுயு காா்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியது:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பாக நீட்ஸ் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 25 பயனாளிகளுக்கு ரூ.6.29 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது. 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு 17 பயனாளிகளுக்கு 1.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பயனாளிகளுக்கு ரூ.90.50 லட்சம் மானியத்துடன்கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின்கீழ் கடன்பெற வயது உச்சவரம்பு பொதுப் பிரிவினருக்கு 35-லிருந்து 45 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45-லிருந்து 55 வயதாகவும் உயா்த்தப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய மேலாளா் மணிவண்ணன் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT