மயிலாடுதுறை

குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி தாமரைக் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி குமரக்கோயில் எதிரே தாமரைக் குளம் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சத்தில் தூா்வாரும் பணி தொடங்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா் வாய்க்காலில் விடுவதும் தடைபட வாய்ப்புள்ளது.

இருப்பினும், குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்து அகற்றி, குளத்தை முழுமையாக தூா்வார மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT