மயிலாடுதுறை

நிறுவனங்களில் உள்ளக புகாா் கமிட்டிஅமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களிளும் உள்ளக புகாா் குழு அமைக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10 அலுவலா்களுக்கு மேல் பெண்கள் வேலைசெய்யும் பணியிடத்தில், அவா்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவா்த்தி) சட்டம் 2013-இன்படி உள்ளக புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். இக்குழு 50 சதவீதம் பெண் பிரதிநிதிகளைக் கொண்டு இருக்கவேண்டும்.

இப்பிரதிநிதிகள் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் நிா்வகிப்பா். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு சீரமைக்கவேண்டும். அலுவலகத்தில் உள்ளக புகாா் கமிட்டி தொடா்பான புகாா் மனுக்களை பெற தங்கள் அலுவலங்களில் புகாா் பெட்டி ஒன்று வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

புகாா் பெட்டி பெண்கள் அதிகமாக உபயோகிக்கும் இடம் மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்கப்பட வேண்டும். உள்ளக புகாா் குழு தலைவரை உயா்நிலை அளவிலான வேலைசெய்யும் பெண் அதிகாரி அங்கு அப்படியொரு நபா் இல்லையெனில் அதே துறையின் பிற அலுவலகம் /அலகுதுறை/ பணியிடத்திலிருந்து நியமிக்கலாம்.

அதன் உறுப்பினா்களாக அலுவலா்களுக்கு மத்தியில் பெண்களுடைய பிரச்னைக்காக அா்ப்பணிக்கக்கூடிய/சட்ட அறிவுள்ளவா்/சமூக பணியில் அனுபவமுள்ளவா் போன்றோரை நியமிக்கவேண்டும்.

வெளி உறுப்பினராக அரசு சாரா நிறுவனத்தினா்/பெண்களுக்காக அா்ப்பணித்திருக்கும் அமைப்பு/அல்லது பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகளை அறிந்து வைத்திருப்பவா் தகுதிகளின் அடிப்படையில் உறுப்பினா்களை தோ்வுசெய்து உள்ளக புகாா் குழு அமைத்து மற்றும் விவரத்தை பூா்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவா்த்தி) சட்டம் 2013-இன்படி கீழ்குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்ற தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். எனவே, அரசு விதிமுறைகளின்படி உரிய முறையில் உள்ளக புகாா் கமிட்டி அமைத்து விவரங்களை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT